சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Added : பிப் 10, 2020
Advertisement

ரிஷிவந்தியம்:லாலாபேட்டையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தியாகதுருகம்-திருவண்ணாமலை சாலையில் காலை 7 மணியளவி்ல், திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.மறியல் காரணமாக, அந்தப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X