பொது செய்தி

தமிழ்நாடு

லூர்து அன்னை சர்ச் திருவிழா கோலாகலம்

Added : பிப் 10, 2020
Advertisement
 லூர்து அன்னை சர்ச் திருவிழா கோலாகலம்

சேவூர் - புளியம்பட்டி ரோட்டில், லுார்துபுரம் பகுதியில் புனித லூர்து அன்னை சர்ச் உள்ளது. ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று முன்தினம், மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் தலைமையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.மாலை, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், தேவ அன்னை பவனி வந்தார். பங்கு சிறுவர், சிறுமியர், கலை நிகழ்ச்சி மூலம், இறை செய்தி வழங்கினர். நேற்று காலை,8:30 மணிக்கு, அருட்திரு ஜார்ஜ் தனசேகரன் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. பங்கில் உள்ள சிறுவர், சிறுமியருக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. பக்தர்கள் வேண்டுதல் தேர் எடுத்தனர். காலை, 11:30 மணிக்கு கோவை, மேய்ப்பு பணி நிலைய செயலாளர் ஆண்டனி செல்வராஜ் தலைமையில், திருப்பலி நடந்தது. மாலை, கருமத்தம்பட்டி வட்டார தலைமை குரு ஸ்டீபன் ஆரோக்கியராஜ் தலைமையில், ஜெபமாலை, திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை, பங்கு குரு லுாயிஸ் இருதயராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X