பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை திறனாய்வு போட்டி: மாணவ, மாணவியர் ஆர்வம்

Added : பிப் 10, 2020
Advertisement
 இயற்கை திறனாய்வு போட்டி: மாணவ, மாணவியர் ஆர்வம்

திருப்பூர்:உலக வன நாளை முன்னிட்டு, வனத்துக்குள் திருப்பூர், தேசிய பசுமைப்படை, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இயற்கை சார்ந்த திறனாய்வு போட்டி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது.இதில், ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடந்தது. இயற்கை சார்ந்த பல்வேறு தலைப்புகளில் போட்டிகளில் நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார்.ஏற்பாடுகளை, வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், திட்ட இயக்குனர் குமார் செய்திருந்தனர்.மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, ஆயிரத்து, 200 பேர் போட்டியில் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.போட்டி முடிவுகள், எதிர் வரும் 'வனத்துக்குள் திருப்பூர்' நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X