பொது செய்தி

தமிழ்நாடு

- இன்று உலக பயறுவகை தினம் - உடலுக்கு வலு சேர்க்கும் 'ஏழைகளின் இறைச்சி'

Added : பிப் 10, 2020
Advertisement
 - இன்று உலக பயறுவகை தினம் -  உடலுக்கு வலு சேர்க்கும்  'ஏழைகளின் இறைச்சி'

தினசரி உணவில் பருப்பு வகைகள் இல்லாமல் சமையல் இல்லை என்றே சொல்லாம். ஏதாவது ஒரு உணவில் ஒரு வகை பயறு நிச்சயம் இடம் பெறும். தாவரங்களை விட அதிக சத்துகள் நிறைந்தவையாக பயறு வகைகள் உள்ளன. புரதச்சத்து அதிகமுள்ளவைகளில் பயறு வகை பயிர்களே முக்கிய இடம் வகிக்கின்றன.

சராசரியாக 100 கிராம் பயறு வகை பயிரில் 335 கலோரி எரிசக்தி, 20 கிராம் புரதச்சத்து, 140 மில்லி கிராம் கால்சியம், 300 மி.கி., பாஸ்பரஸ், 8 மி.கி., இரும்புச்சத்து, 0.5 மி.கி., தயாமின், 0.3 மி.கி.,
நியாசின் உள்ளது.இறைச்சி உண்பதால் எவ்வளவு புரதச்சத்து கிடைக்குமோ அந்த அளவுக்கு பயறு வகை பயிர்களை உண்ணும் போதும் புரதச்சத்து கிடைக்கிறது.

அதனால் இதனை 'ஏழைகளின் இறைச்சி' எனவும் அழைக்கப்படுகிறது. இதில் கொழுப்புச்
சத்தும், நார்ச்சத்தும் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் சிறந்த தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும் விளங்குகின்றன.

உடல் ஆரோக்கியம்

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, ஒருவர் தினமும் 85 கிராம் பருப்பை தனது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆனால், 40 கிராம் மட்டுமே எடுத்து கொள்கிறோம். இதை சரி செய்ய பயறு வகை பயிர்களின் உற்பத்தியை 3 மடங்கு அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பயறு வகை பயிர்களின் குறைந்த விளைச்சலுக்கு முக்கிய காரணம்
பெரும்பாலும் மானாவாரி பயிராகவோ, கலப்பு அல்லது ஊடு பயிராகவோ பயிரிடப்படுவதே ஆகும்.

பயறு வகை பயிர்களை தனிப்பயிராக பயிரிடுவதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் தட்டைப்பயறு, உளுந்து, துவரை, பாசிப்பருப்பு, மொச்சை ஆகியவை 20 ஆயிரம் எக்டேரில் சாகுபடியாகிறது. இங்கிருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. சாதாரண பயிரை விட முளைக்கட்டிய பயறு கூடுதல் நன்மை சேர்க்கும். உடல் வலுவோடும், நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழ இன்று (பிப்.10) உலக பயறுவகை பயிர்களின் தினத்தில் உறுதி எடுப்போம்.

உற்பத்தி அதிகரிக்கும்

விதை பரிசோதனை அலுவலர் சிங்கார லீனா, வேளாண் அலுவலர்கள் கண்ணன் சத்தியா ஆகியோர் கூறியது: பாசன வசதி உள்ள பகுதிகளில் துவரை, உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை தனிப்பயிராக பயிரிடலாம். சரியான பட்டத்தில் காலத்திற்கேற்ற உயர் விளைச்சல் ரகத்தை தேர்வு செய்வது அவசியம். விதைகளை நேர்த்தி செய்து விதைத்தல், செடிகளுக்கு இடையே சரியான இடைவெளியை பராமரிக்க வேண்டும். நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையை
கண்காணித்து தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை பின்பற்றி பயறு வகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். வறட்சி காலத்தில் நடமாடும் நீர் தெளிப்பானை பயன்படுத்தி பாதுகாக்கலாம். பயறு வகை சாகுபடிக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகிறது. ஒரே சமயத்தில் செடிகள் முதிர்ச்சி அடைந்து அறுவடை செய்ய தகுந்த ரகங்களை பயிரிட வேண்டும். சாகுபடியான பயறுகளை சேமிப்பு கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம். அறுவடை செய்த பயறுகளை அப்படியே விற்பதை விட மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பதால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என, இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X