கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : பிப் 10, 2020
Share
 கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டிவனம்:திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் மாவட்ட அளவிலான கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வரலாற்று துறைத்தலைவர் கமலக்கண்ணன் வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கணேசன் தலைமையுரையாற்றினார். கிராம சுகாதார செவிலியர் விஜயா விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளித்தார்.ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பேசுகையில், கொரோனா வைரசின் தாக்கம், நோய் வருவதை காப்பது குறித்து, விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் லதா நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X