சிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி அரங்குகள் புக்கிங்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறு, குறு நிறுவனங்களுக்கான கண்காட்சி அரங்குகள் புக்கிங்

Added : பிப் 10, 2020
Share

திருப்பூர்:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு சார்பில், எம்.ஐ.கே.ஏ.எப்., (சிறு, குறு நிறுவனங்களுக்கான சர்வதேச பின்னலாடை கண்காட்சி) சர்வதேச பின்னலாடை கண்காட்சி, அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., கண்காட்சி வளாகத்தில், வரும் மார்ச் 5ல் துவங்கி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் உட்பட நாடு முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர ஆடை தயாரிப்பு, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளில் ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை பெற்றுத்தருவதற்காக 200 அரங்குகளுடன் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மட்டும் இந்த கண்காட்சியில் அரங்கம் அமைத்து, நுால், துணி, ஆயத்த ஆடைகள். அக்சசரீஸ், நிட்டிங், டையிங் ஜாப்ஒர்க் சேவைகளை காட்சிப்படுத்தலாம். அரங்க கட்டணத்தில் 80 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது.சர்வதேச வர்த்தக முகமை நிறுவனத்தினர், வெளிநாட்டு வர்த்தகர்கள், உள்ளூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஆடை வர்த்தகர்கள், பிரபல சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக விசாரணை நடத்த உள்ளனர்.
ஏற்றுமதி, உள்நாட்டுக்கான ஆடை தயாரிப்பு, ஜாப்ஒர்க் வாய்ப்புகளை பெற்றுத்தரும் இந்த கண்காட்சியில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், அரங்கம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் பங்கேற்பதற்கான ஸ்டால் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது.திருப்பூர் - பல்லடம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள தொழில் பாதுகாப்புக்குழு அலுவலகத்தை அணுகி, கண்காட்சிக்கான அரங்கம் புக்கிங் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு: 87540 50005, 96557 90005.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X