சுருளி அருவி வளர்ச்சி பணி: பிற துறைகளுக்கு அனுமதி மறுப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

கம்பம்:சுருளி அருவிக்குள் எந்த வளர்ச்சி பணியாக இருந்தாலும் வனதுறையே மேற்
கொள்ளும். பிற துறைகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுருளி அருவிக்குள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. தினமும் நுாற்றுக்
கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் டோல்கேட்டிலிருந்து அருவிவரை ரோடு மிக மோசமாக உள்ளது. ரோட்டை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரோடு விவகாரம் நெடுஞ்சாலைத்துறைக்கும், வனத்
துறைக்கும் அடிதடி என வழக்குகளில் முடிந்தது.அதன்பிறகும் இதுவரை ரோடு சீரமைக்கப்
படாமல் உள்ளது.

கடந்த ஆண்டு உத்தமபாளயைம் சப்கலெக்டராக இருந்த வைத்தியநாதன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள்பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் சுருளி அருவிக்குள்,
அருவிக்கு வெளியே செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படு திட்டம்
தயாரிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.வனத்
துறையினர் கூறுகையில், சுருளி அருவியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சுருளி அருவிக்குள் செய்ய வேண்டிய பணிகள் வனத்
துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

அருவிக்கு வெளியே செய்யக்கூடிய பணிகளை அந்தந்த துறையினர் செய்து கொள்ளட்டும்.
சரணாலயப் பகுதி என்பதால் வனத்துறை மட்டுமே பணி செய்ய அனுமதி உண்டு. எனவே பிற துறையினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X