அரசியல் செய்தி

தமிழ்நாடு

கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement
 கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

கண்டமங்கலம்:கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலராக கண்ணன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பெரியபாபுசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலரும் முன்னாள் ஊராட்சி தலைவருமான சவுரிராஜன், ஊராட்சி செயலர் துரை ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை அவைத்தலைவர்கள் லோகிதாசன், பாலமுருகன், வீரப்பன், கிளை செயலர்கள் கோதண்டம், அசோக்குமார், தங்கராசு மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஒன்றிய செயலராக பொறுப்பேற்ற பிறகு, நடந்த கூட்டத்திற்கு வருகை தந்த வடக்கு ஒன்றிய செயலருக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலர் சவுரிராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து, வரவேற்பு கொடுத்தனர்.
கூட்டத்திற்கு தலைமையேற்று வடக்கு ஒன்றிய செயலர் கண்ணன் பேசும் போது,'' உங்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட வேண்டும்'' என்று கூறினார்.இதேபோல் சின்னபாபுசமுத்திரம், பள்ளித்தென்னல் நவமால்காப்பேர், குமளம் மற்றும் கெங்கராம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X