பல லட்ச ரூபாய் நிதியில் கட்டிய சமுதாய கூடங்களால் பயன் இல்லை

Added : பிப் 10, 2020
Advertisement



கம்பம்:அரசின் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட சமுதாய கூடங்கள்
பொதுமக்களுக்கு பயன்படாமல் உள்ளன.

கம்பம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கென சமுதாய கூடங்கள் கட்டப்பட்டது.
காதணிவிழா, வசந்தவிழா, வளைகாப்பு, வரவேற்பு போன்ற விசேசங்கள் நடத்த திருமண
மண்டபங்களுக்கு சென்றால் பல ஆயிரம் ரூபாய் வாடகை கேட்பார்கள். எனவே பொதுமக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காக வாரச்சந்தை, ஆங்கூர்பாளையம் ரோடு, தாத்தப்பன்குளம் என மூன்று இடங்களில் ரூ. 80 லட்சம் செலவில் சமுதாய கூடங்கள் கட்டப்பட்டது.

இதில் வாரச்சந்தை சமுதாய கூடம் மட்டும் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இந்த சமுதாயகூடத்தை காரணமே இல்லாமல் பூட்டி வைத்து
விட்டனர். அதற்கு பின் கட்டப்பட்ட ஆங்கூர்பாளையம், தாத்தப்பன்குளம் சமுதாய கூடங்கள் நீண்டநாட்களாக பூட்டியே இருந்தது. பின் தனிநபர்களுக்கு குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விட்டுள்ளனர்.

எப்படியோ நகராட்சிக்கு வருவாய் வந்துவிட்டது என்று நகராட்சி நிர்வாகம் நினைக்கிறது. ஆனால் பொதுமக்கள் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடங்கள், பொதுமக்கள் பயன்படுத்தாமல், தனிநபர் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. அதுவும் கட்டு
மானங்களின் செலவிற்கு இணையாக வருவாய் இல்லை.

லாபநோக்கை பாராமல், பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட சமுதாய கூடங்கள், என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு பயன்படாமல் தனிநபர் பயன்பாட்டிற்கு, நகராட்சியில் விடப்பட்டுள்ளது. அரசின் லட்சக்கணக்கான ரூபாய் வீணடிக்கப் பட்டுள்ளது. அரசின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X