பொது செய்தி

தமிழ்நாடு

'களை' அகற்றினால் களைகட்டும்! வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'

Added : பிப் 10, 2020
Advertisement
 'களை' அகற்றினால் களைகட்டும்! வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'

அவிநாசி:வெங்காய சாகுபடி முறை குறித்து, திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரில் செயல்படும், மத்திய அரசின் வேளாண் அறிவியல் நிலைய ஆராய்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, மண்ணியல் துறை வல்லுநர் தனசேகரன் பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:வெங்காய சாகுபடிக்கு, நல்ல வடிகால் வசதியுடன் கூடிய இறுக்கும் அற்ற, வண்டல் மண் மிக முக்கியம்.
வெப்பமான பருவ நிலையில், மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும்.சாகுபடிக்கு முன், நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு ஆழமாக உழ வேண்டும். கடைசி உழவின் போது, நன்கு மக்கிய தொழு உரத்தை, ஏக்கருக்கு, 4 டன் என்ற அளவில், வயலில் இட வேண்டும். பின், 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைக்க வேண்டும்.நடவுக்கு முன், பார் பாத்திகளில், இருபுறமும் அடியுரமாக, எக்டருக்கு, 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும்.
தினமும், ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்; அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும்.கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ.என்-5, மற்றும் எம்.டி.யு.,1 ஆகிய ரகங்கள் விதைப்புக்கு ஏற்றவை. நடுத்தர அளவுள்ள, நன்கு காய்ந்த வெங்காயத்தை, இருபுறமும் சரிவில், 10 செ.மீ., இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.விதை வெங்காயம் நடவு செய்த, 30 நாள் கழித்து, களை எடுத்து மேல் உரம் இட்டு, மண் அணைத்து, நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின், தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரித்தால், வெங்காய சாகுபடி களைகட்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X