பொது செய்தி

தமிழ்நாடு

'எனது நகரம்; எனது பெருமை!' 'ஸ்மார்ட் சிட்டி' கருத்து பதிய அழைப்பு

Added : பிப் 10, 2020
Advertisement
 'எனது நகரம்; எனது பெருமை!' 'ஸ்மார்ட் சிட்டி' கருத்து பதிய அழைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் குறித்து கருத்து பதிவு செய்ய மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் கூறியதாவது:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தற்போது 948 கோடி ரூபாய் மதிப்பில், 24 பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
பணிகள் மேம்படுத்தும் வகையில், பொதுமக்களிடம் கருத்துகளை, மத்திய அரசு 'எனது நகரம், எனது பெருமை' என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் பெற்று வருகிறது.திருப்பூர் மக்கள் இதில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து, நிர்வாகத்துக்கு இதை மேம்படுத்தும் வகையில் ஒத்துழைக்க வேண்டும்.இத்திட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரைகள் சீரமைத்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.
பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட் ரோடு திட்டம் 180 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது.'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் கடந்த 2017ம் ஆண்டு இங்கு அறிவிக்கப்பட்டு, அப்போதைய எம்.பி., மூலம் உரிய வகையில் ஆலோசனை பெறுதல் மற்றும் தகவல் அளித்தல் உள்ளிட்டவை நடந்துள்ளன.தற்போதைய எம்.பி., மார்க்கெட் கடைகள் இடமாற்றம் உள்ளிட்டவை குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு உள்ளிட்டவை கட்டுமானம் முடிந்து, துறைரீதியான விதிமுறைகளின் படி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X