பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கட்டடம் கட்டுமான பணி : தினசரி மார்க்கெட் இடம் மாறுது

Added : பிப் 10, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் தினசரி மார்க்கெட் இன்று முதல் மாற்று இடத்தில் செயல்படவுள்ளது.திருப்பூர் காமராஜ் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில், தினசரி மார்க்கெட் செயல்படுகிறது. ஏறத்தாழ 2.25 ஏக்கரில், 400 கடைகள் உள்ளன. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், இந்த இடத்தில், 29 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மார்க்கெட் வளாகம் அமைக்கப்படுகிறது.இதில், தரை மற்றும் முதல் தளம் என இரு அடுக்குகளில் 396 கடைகள் கட்டப்படுகிறது. மேலும், 250க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் 100 நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யும் வசதி; பொதுக்கழிப்பிடமும் அமைக்கப்படுகிறது. கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.இதற்காக, தற்போதுள்ள கடைகள் இடமாற்றம் செய்ய, பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கடைகள் செயல்பட துவங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X