பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்கும் வகையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தபடுமா?

Added : பிப் 10, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையில், செயலிழந்து கிடக்கும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நகரம் மற்றும் ஊர்ப்பகுதிகளில் முழுமையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், மழை நீர் வீணாவதை தடுக்கவும் மழை நீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.அரசு அலுவலகங்கள், தனியார் வீடுகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வந்தது. மேலும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குளங்கள் வெட்டியும் மழைநீர் சேகரிக்கப்பட்டது. வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் கூட மழைநீர் குழாய்கள் மூலம் நீர் சேகரிக்கப்பட்டது.வருங்காலங்களில் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அமைந்திட்ட இந்த திட்டத்தை மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டும்.இத்திட்டத்தால் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் மழை நீர், சாக்கடை கால்வாய்களில் கலந்து வீணாகாமல் பரவலாக நிலத்தடியில் சேகரிக்கும் வகையில் அமைந்ததால் நிலத்தடி நீர் குறையாமல் இயற்கை வளம் பாதுகாக்கப்பட்டு நற்பலனை கொடுக்கும்.தமிழகத்தில் சிறப்பாக கையாளப்பட்டு வந்த இந்த திட்டம் படிப்படி யாக வலுவிழுந்து செயல்பாட்டுக்கு வராமல் ஏட்டளவில், திட்டத்திற்கென நிதியாதாரங்கள் வழங்கப்படுவதுடன், செயல்படுத்தப்படாமல் விடப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் மழைக்காலங்களில் மட்டும் நிரம்புவதால் ஆறு, ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு விவசாய பணிகள் நடக்கிறது.
ஆனால் பருவ மழையோ பல நேரங்களில் பொய்த்துப்போவது வாடிக்கையாக தொடர்கிறது.அத்துடன் நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக படுவேகமாக குறைந்து பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது.மழையின்றி பரவலாக ஆறு, ஏரி, குளம் போன்ற நீரமைப்புகள் வற்றிப்போகும் நிலையில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு போர்வெல்கள் அமைத்து நீரை உறிஞ்சும் கலாசாரம் பரவலாகி வருகிறது.இதனால் ஒட்டு மொத்த நிலத்தடி நீர்மட்டமும் வெகு வேகமாக குறைந்து இயற்கை சூழலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை நீடித்து வருகிறது.
அவ்வப்போது பெய்யும் மழை நீரும் நிலத்திற்குள் சேமிக்காமல் வடிகால்கள் வழியாக வழிந்தோடி வீணாகிறது.எனவே புதிதாக தோன்றியுள்ள கள்ளக் குறிச்சி மாவட்டத்திற்குள் அமைந்துள்ள ஒரு நகராட்சி, 7 பேரூராட்சிகள், 6 தாலுகாக்கள் உள்ளடக்கிய பகுதி களில் இயற்கையின் வரமாக கிடைக்கும் மழைநீரை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.அத்துடன் மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம் போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X