பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரம்! நவரை பட்டம் நெல் நடவு பணியில் விவசாயிகள்...மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு அதிகரிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

தியாகதுருகம்:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவரை பட்டம் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த ஆண்டு ஓரளவு பெய்தது. தென்மேற்கு பருவமழை துவக்கத்தில் போக்கு காட்டிய போதும் முடியும் தருவாயில் கனமழை கிடைத்தது.இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கிணற்று பாசனம் கைகொடுத்ததால் சம்பா பருவ நெல் சாகுபடி தாமதமாக துவங்கியது.மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சம்பா பருவம் தாமதமாக துவங்கிய போதும் விவசாயிகள் நெல் நடவு செய்யும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டினர்.இக்காரணத்தால் தற்போது வரை நெல் அறுவடை பணிகள் தொடர்கிறது. வழக்கமாக டிச., மற்றும் ஜன., மாதத்தில் நவரை பட்டம் துவங்கும். சம்பா அறுவடை தாமதமானதால் நவரை பட்டம் ஒரு மாதம் தாமதமாக துவங்கியுள்ளது.பாசன கிணற்றில் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்து இருப்பதால் நவரை பட்டம் நெல் நடவு பணியை நம்பிக்கையுடன் துவக்கியுள்ளனர்.
மூன்று மாதத்தில் பலன் தரும் ஏ.டி.டீ., 36 ரகம் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.அதேபோல் தனியார் சர்க்கரை ஆலைகள் குறித்த தருணத்தில் கரும்புக்கான பணத்தை விவசாயிகளுக்கு தராமல் ஓராண்டாக அலைக்கழித்து வருகிறது. கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சியால் கரும்பு சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.கரும்புக்கு உரிய பணம் வராதது விவசாயிகளை விரக்தியடைய செய்துள்ளது.இதனால் கரும்பு பயிரிடுவதை தவிர்த்து பெரும்பாலான விவசாயிகள் மீண்டும் நெல் சாகுபடிக்கு திரும்பி வருகின்றனர்.கரும்பு அறுவடை செய்த பின்னர் மறுதாம்பு விடாமல் நிலத்தை திருத்தி நெல் நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நீர் வளம் அதிகம் உள்ள பகுதியில் நவரை பட்டத்தை தொடர்ந்து ஏப்., மற்றும் மே மாதங்களில் சொர்ணவாரி பட்டம் நெல் சாகுபடி செய்யவும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல் பயிரிடும் பரப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X