பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு

Added : பிப் 10, 2020
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான பாடங்கள் வாரியாக ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெற்றது.
அரசு, நகராட்சி, மேல்நிலை பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.நேற்று காலை 10.00 மணிக்கு, தமிழ் பாடத்திற்கு 20 பணியிடங்களும், ஆங்கிலம் 17, வரலாறு 8, பொருளியல் 5, வணிகவியல் 4, அரசியல் அறிவியல் 1 உட்பட மொத்தம் 55 பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடந்தது. இந்த ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, தங்களுக்கான ஊர், பணிபுரிய வேண்டிய பள்ளியை தேர்வு செய்து விட்டு சென்றனர்.இந்த கலந்தாய்வை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மேற்பார்வையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிருஷ்ணபிரியா, கார்த்திகா, சுப்ரமணியன், நடராஜன், மணிமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆசிரியர்களுக்கு, இன்று (10ம் தேதி) பணிக்கான ஆணை வழங்கப்படுகிறது.இதனை தொடர்ந்து, இன்று (10ம் தேதி) கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் ஆகிய பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு நடக்கிறது. இந்த ஆசிரியர்களுக்கு, நாளை (11ம் தேதி) பணிக்கான ஆணை வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X