பொது செய்தி

தமிழ்நாடு

பாதையை மாற்றும் நேரமிது! 'வெற்றிப்பாதையில் திருப்பூர்' காட்டிய வழி

Added : பிப் 10, 2020
Share
Advertisement
திருப்பூர்:பின்னலாடைத் தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், திருப்பூரில், நேற்றுமுன்தினம், 'வெற்றிப்பாதையில் திருப்பூர் - 2020' கருத்தரங்கு நடந்தது. இதில், வல்லுனர்கள் பங்கேற்று, தொழில் மேம்பாட்டுக்கான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.திருப்பூர் ஆடிட்டர் ராமநாதன் கூறியதாவது:கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களுக்கு, தொழில்முனைவோர் செயல்வடிவம்

திருப்பூர்:பின்னலாடைத் தொழில்துறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில், திருப்பூரில், நேற்றுமுன்தினம், 'வெற்றிப்பாதையில் திருப்பூர் - 2020' கருத்தரங்கு நடந்தது. இதில், வல்லுனர்கள் பங்கேற்று, தொழில் மேம்பாட்டுக்கான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.
திருப்பூர் ஆடிட்டர் ராமநாதன் கூறியதாவது:கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட அம்சங்களுக்கு, தொழில்முனைவோர் செயல்வடிவம் கொடுக்கவேண்டும். அப்போதுதான், உண்மையான நோக்கம் நிறைவேறும்; நிறுவனங்கள் வளர்ச்சி பெறும்.தொழில்முனைவோர் உள்நோக்கிய மற்றும் வெளிநோக்கிய பார்வையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற இரண்டு மைய கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. ஏற்கனவே தொடர்பு வைத்துள்ள வர்த்தகர்கள் மட்டுமின்றி, புதிய சந்தை வாய்ப்புக்களை கண்டறியவேண்டும்.இதற்காக, காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இன்றே, புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறியும் பணிகளை, திருப்பூர் பின்னலாடை துறையினர் துவக்கவேண்டும். கால மாற்றத்துக்கு ஏற்ப, புதுமையான ஆடை ரகங்களை தயாரிக்கவேண்டும்.ஆடை உற்பத்தி துறையினர், இதுவரை பயணித்துவந்த அதே பாதையில் இருந்து, தங்களை சிறிது மாற்றிக்கொள்ளவேண்டும். சந்தைக்கு என்ன தேவை என அறிந்து, ஆடைகளை தயாரிக்க வேண்டும். பருத்தி நுால் ஆடைகளுக்கு பதில், செயற்கை இழைகளாலான மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்களை உருவாக்கவேண்டும்.ஆடை டிசைன்களை சுயமாக உருவாக்கவேண்டும். 45 நாட்களுக்குள் ஆடை தயாரித்து அனுப்பிவைக்கவேண்டியுள்ளது;
இதற்கேற்ப நிறுவனங்கள், உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கவேண்டும். மூலப்பொருட்கள் வீணாவது, கால விரயத்தை தடுக்கவேண்டும்.முன்னாள் ஐ.ஜி., பாரி கூறியதுபோல், சோதனைகளை கண்டு துவண்டுபோக கூடாது. நேர்மறை கருத்துக்களை மற்றவர்களிடமும், தங்கள் மனதிலும் விதைக்கவேண்டும். பிரச்னைகளை அறிவியல் பூர்வமாக, அறிவுப்பூர்வமாக அணுகி, சோதனைகளை சாதனைகளாக மாற்றிக்காட்டவேண்டும்.இவ்வாறு, ராமநாதன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X