பொது செய்தி

தமிழ்நாடு

பல்லடத்தில் பைபாஸ் ரோடு மேலும் ஒரு ஆண்டு தாமதம்?

Added : பிப் 10, 2020
Share
Advertisement

பல்லடம்:பல்லடத்தில், பைபாஸ் ரோடு பணி மேலும் ஒரு ஆண்டு தாமதமாகிறது.பல்லடத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பைபாஸ் ரோடு அமைப்பது கட்டாயமாகியுள்ளது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர் ரோட்டை இணைக்கும்படியாக, பைபாஸ் ரோடு அமைப்பதற்கான ஒப்புதல் கடந்த ஆண்டு கிடைத்தது.அதன்படி, காளிவேலம்பட்டி பிரிவில் துவங்கி, மாணிக்காபுரம், மங்கலம் ரோடு, வெட்டுப்பட்டான்குட்டை, குங்குமப்பாளையம், நல்லுார்பாளையம் வழியாக, திருச்சி ரோட்டை இணைக்கும் வகையில், 14 கி.மீ., துாரம், ரிங் ரோடு அமையவுள்ளது. அதற்கான அளவீடு பணிகள், கடந்த நான்கு மாதங்கள் முன்பே முடிந்தன. அடுத்த கட்ட பணிகள் நடைபெறவில்லை.நபார்டு மற்றும் கிராம சாலைகள் உதவி செயற்பொறியாளர் ஹேமலதாவிடம் கேட்டதற்கு, 'ரிங் ரோடு அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. நில உரிமையாளர்களுக்கான இழப்பீடு தொகை வழங்குதல், ரிங் ரோடு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்ததும், ரிங் ரோடு அமைக்கும் பணி ஆரம்பிக்கப்படும்' என்றார்,.'இப்பணி துவங்கவே, மேலும் ஒரு ஆண்டு காலம் ஆகலாம்'என்கின்றனர் அதிகாரிகள். பைபாஸ் ரோடு பணியை மேலும் தாமதம் செய்யாமல், விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X