பொது செய்தி

தமிழ்நாடு

பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க கூட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement
 பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க கூட்டம்

விழுப்புரம்:தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம், வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பீட்டர் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட தலைவர் கணேசன் வரவேற்றார். பொருளாளர் வாசுதேவன் ஆண்டறிக்கை வாசித்தார்.பொது செயலாளர் செல்வம், திண்டிவனம் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், செஞ்சி தலைவர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செல்வராஜ், பொது செயலாளர் தமிழ்மணியன், பொருளாளர் கணேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முன்னாள் மாநில பொது செயலாளர் இளங்கோவன், பட்டதாரி ஆசிரியர் கழகம் பொது செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைமையிட செயலாளர் முகந்தய்யா, முன்னாள் மாவட்ட தலைவர் அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் நேரடி பணிநியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கல்வி மாவட்டங்களிலும் நிரந்தரமாக நீட் தேர்வு பயிற்சி மையம் அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட அமைப்பு செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X