அரசு பஸ்கள் கலெக்சன்: கூவி அழைக்க ஆள் வேணுமாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்கள் கலெக்சன்: கூவி அழைக்க ஆள் வேணுமாம்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Share

திருப்பூர்:அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தின் கீழ் திருப்பூர் உள்ளது. காங்கயம் ரோட்டில் டிப்போ 1 மற்றும் டிப்போ 2 செயல்படுகிறது.தாராபுரம், பழநி, பல்லடம், காங்கயம் உள்ளிட்ட கிளை அலுவலகங்கள் செயல்படுகிறது. இரண்டு டிப்போவில் இருந்து, தினமும், 168 டவுன், சர்வீஸ் பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.டிப்போவில் இருந்து இயக்கப்படும் பஸ்களை சுத்தம் செய்ய ஊழியர் பற்றாக்குறை உள்ளது. ஒரு பஸ்சுக்கு மூன்று ஊழியர் தேவைப்படும் சூழலில், இரு பஸ்சுக்கு ஒருவர் வீதமே பணிபுரிகிறார். இதனால், அரைகுறை துாய்மையுடன் பஸ்கள் வெளியே அனுப்பப்படுகிறது.தனியாருடான போட்டியை சமாளிக்க முடியாததால், ஏற்கனவே அரசு பஸ்கள் வருவாய் இழப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் பழைய பஸ்களில் சுகாதாரக்கேடும் நிலவுவதால், கலெக் ஷன் 'டல்'லடிக்கிறது.கலெக் ஷன் எடுக்க தவறும் பஸ்களில், பயணிகளை ஏற்றி விட வசதியாக, பஸ்களுக்கு ஆட்களை கூவி அழைக்க ஊழியரை தேர்வு செய்ய திருப்பூர் டிப்போ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பஸ்களுக்கு பயணிகளை கூவி அழைக்க ஆள் தேவை. தொடர்புக்கு என ஒரு செல்போன் எண்ணை பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் ஒட்டியுள்ளன.இது எப்படி இருக்குஉயரதிகாரிகள் உத்தரவை ஏற்று பஸ்சை சுத்தம் செய்ய, பயணிகளை கூவி அழைக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகை அவ்வப்போது டிப்போ, பஸ் ஸ்டாண்டில் வைக்கப்படுகிறது.அறிவிப்பில் கூறப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு (9865208788) தொடர்பு கொண்டால்,' நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரை தற்போது தொடர்பு கொள்ள முடியாது,' என்ற பதிலே கிடைக்கிறது. பல முறை தொடர்பு கொண்டும் இதே பதில் வருவதால், வர ஆர்வமாக இருப்பவர் கூட ஒதுங்கி கொள்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X