பொது செய்தி

தமிழ்நாடு

இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Added : பிப் 10, 2020
Advertisement
 இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி:இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் துாய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி கணினி அறிவியல் கணினி பயன்பாடியல், வணிகவியல் துறைகள் சார் பில் மரக்கன்றுகள் மற்றும் துாய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.குதிரைச்சந்தல் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரியின் துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். குதிரைச்சந்தல் வி.ஏ.ஓ., தனலட்சுமி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.கல்லுாரி மாணவ மாணவிகள் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுப்புற துாய்மைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அசோக் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X