பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சிக்கு வரிபாக்கி செலுத்தாதோர் சொத்துக்கள் ஜப்தி : ஆணையர் எச்சரிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement

திண்டிவனம்:திண்டிவனம் நகாட்சிக்கு வரிபாக்கி செலுத்தாதவர்களின் சொத்துகள் ஜப்தி செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என திண்டிவனம் ஆணையர் ஸ்ரீபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :திண்டிவனம் நகராட்சியில் சொத்து, காலிமனை, தொழில் வரிகள், குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள் மற்றும் கடை வாடகை செலுத்த தீவிர வரிவசூல் பணி நடந்து வருகிறது.திண்டிவனம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை வசூல் செய்வதற்குநகராட்சி ஆணையர் ஸ்ரீபிரகாஷ்உத்தரவின் பேரில், 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வரிகளை செலுத்தாதோரின் சொத்துகள் மீது ஜப்தி நடவடிக்கை மற்றும் நீதிமன்ற நடவடிக்கையும், குடிநீர் கட்டணம் செலுத்தாதோர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யவும், குத்தகை இனங்கள் மற்றும் கடை வாடகை செலுத்தாதோரின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சொத்து, காலிமனை, தொழில் வரிகள், குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள் மற்றும் கடை வாடகை செலுத்தாதோர் உடனடியாக மேற்கண்ட நிலுவைகளை நகராட்சிக்கு செலுத்தி ஜப்தி நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகியவற்றை தவிர்த்து கொள்ள வேண்டும்.மேலும், பொதுமக்கள் தொகை செலுத்த வசதியாக, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களிலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும் என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X