நிப்ட் - டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் கோமாதா, அமேசிங் அபாரம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

திருப்பூர்:பின்னலாடை தொழிலாளர்களை உற்சாகப்படுத்தவும், நிறுவனங்கள் இடையே நல்லுறவு வளர்க்கவும் நிப்ட்--டீ கல்லுாரி சார்பில், நிப்ட் - -டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஐந்தாம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம் நிப்ட்--டீ கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் போட்டியை துவக்கிவைத்தார். கல்லுாரி முன்னாள் தலைவர் முருகானந்தன், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.போட்டியில், மொத்தம் 23 பின்னலாடை நிறுவன அணிகள் பங்கேற்றுள்ளன. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை, காலை, மாலை என இரண்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.முதல்நாளான நேற்று காலை நடந்த போட்டியில், கோமாதா இன்டர்நேஷனல் அணி, 19.1 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 84 ரன் எடுத்தது. எஸ்.கே.எல்., அணி, 18.5 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 75 ரன்னில் சுருண்டது. 3.5 ஓவருக்கு, 8 ரன் கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்திய கோமாதா அணி வீரர் அருண் சிவனேசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.மாலையில் நடந்த இரண்டாவது போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கிய, கே.எம்., நிட்வேர் - அணி, 20 ஓவரில், அனைத்து விக்கெட்டையும் இழந்து, 106 ரன் எடுத்தது.பின்னர் ஆடிய அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் அணி, 19.3 ஓவரில், 8 விக்கெட் இழந்து, 107 ரன் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.இரு விக்கெட் வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் 28 ரன் எடுத்த அமேசிங் அணி வீரர் மெய்ஞான குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வரும் 16ம் தேதி காலை நடைபெறும் போட்டியில், ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில் -- கங்கோ கார்மென்ட்ஸ்; அனுகிரஹா பேஷன் -- புளூ ப்ரீஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X