பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தனுாரிலிருந்து திறக்கப்பட்ட நீர் திருக்கோவிலுார் அணைக்கு வந்தது

Added : பிப் 10, 2020
Advertisement

திருக்கோவிலூர்:சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று காலை திருக்கோவில் ஒரு அணைக்கட்டை வந்தடைந்தது.
திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் இரண்டாம் போக உரிமையை நீர் சாத்தனூர் அணையிலிருந்து கடந்த 6ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது. இது நேற்று காலை திருக்கோவிலூரை வந்தடைந்தது.திருக்கோவிலூர் அணைக்கட்டிலிருந்து முறையே பம்பை வாய்க்கால், ராகவன் வாய்க்கால், மலட்டாறு உள்ளிட்ட வாய்க்கால்களில் விநாடிக்கு 150 கனஅடி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.இதன் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் சென்று 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் என வேளாண் துறையினர் நம்பு கின்றனர்.நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தென்பெண்ணை ஆற்று ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் பயன் பெறுவதுடன், செஞ்சி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, வேட்டவலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X