சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் இரண்டாவது திருமணம் மனைவி துாக்கு போட்டு தற்கொலை

Added : பிப் 10, 2020
Advertisement

அவலுார்பேட்டை:கணவன், இரண்டவாவது திருமணம் செய்து கொண்டதால்,மனமுடைந்த பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவலுார்பேட்டை அடுத்த கடப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த வாசுதேவன், 40. விவசாய கூலி. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் ஆனந்தல் கோ.புரவடை கிராமத்தை சேர்ந்த குப்பன் மகள் ஜெயலட்சுமி,32; என்பவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.இவர்களுக்கு பேபி, 12; ராணி,10; என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது.இந்நிலையில் வாசுதேவன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி, நேற்று முன்தினம் அதிகாலையில் கடப்பனந்தல் கிராமத்தில் உள்ள காளிகாம்பாள் கோவில் பின்புறமுள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதுகுறித்து, ஜெயலட்சுமியின் தந்தை குப்பன், தன்னுடைய மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கொடுத்துள்ள புகாரின் பேரில், அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X