பொது செய்தி

இந்தியா

ஒருவர் கண்தானம் செய்தால் 4 பேர் வாழ்வில் ஒளியேற்றலாம்

Added : பிப் 10, 2020
Advertisement

புதுச்சேரி:ஒருவர்கண்தானம் செய்தால் நான்கு பேருடைய வாழ்வில் ஒளியேற்றலாம் எனகருவிழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்பிரீத்தி நவீன் பேசினார்.
இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை சார்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கம் ஓட்டல் அண்ணாமலையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை என்றதலைப்பில் நேற்று நடந்தது.அகர்வால்ஸ் மருத்துவமனைதலைமை மருத்துவர் ஜெயலதா தலைமை தாங்கினார்.இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி கிளைதலைவர்சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கருத்தரங்கில், கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்பிரீத்தி நவீன் பேசியதாவது:இந்தியாவில் 12 லட்சம் பேர்கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை இழந்துள்ளனர். ஆனால் ஆண்டிற்கு 40,000 பேருக்கு தான்கண்தானம் மூலம் கண் பார்வை கிடைக்கிறது.பிறவி குறைபாடு, விபத்து மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் கருவிழிப்படலம் பாதிக்கப்படுகிறது. இவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையை பெற்றுக் கொடுக்க முடியும்.ஆனால் இந்த கருவிழிப்படலத்திற்குநாட்டில்தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். ஒருவர் கண் தானம் செய்தால் நான்கு பேரின் வாழ்வில் ஒளியேற்றலாம். கண்ணின் முன் பகுதி, பின் பகுதி என யாருக்கு எது தேவையோ, அதனை பொருத்தி அவர்களை உலகை காண செய்யலாம்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நடந்த மருத்துவ விவாதத்தில் கண் மருத்துவர்கள் நிருபன், வினோதினி, ரம்யாஆகியோர் கண் டாக்டர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X