கஞ்சாவுடன் மூதாட்டி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சாவுடன் மூதாட்டி கைது

Added : பிப் 10, 2020
Share
 கஞ்சாவுடன் மூதாட்டி கைது

திருப்பூர்:திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சில பகுதியில் மூதாட்டி ஒருவர் வாரந்தோறும் வந்து கஞ்சா சப்ளை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று கிடைத்த தகவலின் பேரில், வடக்கு போலீ சார் பாப்பநாயக்கன்பாளையத்தில் ரோந்து மேற்கொண்டபோது, சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். அவர், பழனி, நெய்க்காரப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி, 60 என்பது தெரிய வந்தது. வாரந் தோறும் ஞாயிற்றுக்கிழமை பழனியில் இருந்து பஸ் மூலம் திருப்பூர் வந்து, மண்ணரை, பாப்பாநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சப்ளை செய்து வருவது தெரிந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ, 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X