உணவு பாதுகாப்பு துறையினர் கோவில்களில் திடீர் ஆய்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு துறையினர் கோவில்களில் திடீர் ஆய்வு

Added : பிப் 10, 2020
Share
திருப்பூர்:தைப்பூசத்தை முன்னிட்டு சிவன்மலை, அலகுமலை, கயித்தமலை முருகன் கோவில்களில் தற்காலிக உணவு கடைகள், அமைக்கப்பட்டுள்ள அன்னதான கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் எட்டு பேர், மூன்று குழுக்களாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர். உணவு தயாரிக்கும் இடம், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு

திருப்பூர்:தைப்பூசத்தை முன்னிட்டு சிவன்மலை, அலகுமலை, கயித்தமலை முருகன் கோவில்களில் தற்காலிக உணவு கடைகள், அமைக்கப்பட்டுள்ள அன்னதான கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் எட்டு பேர், மூன்று குழுக்களாக ஆய்வு பணியில் ஈடுபட்டனர். உணவு தயாரிக்கும் இடம், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு வழங்கும் முறை குறித்து கேட்டறிந்தனர்.அன்னதான கூடங்களில் உணவு வழங்குவது குறித்து, பாலித்தின் பொருட்களை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஆய்வில் அதிக நிறம் சேர்க்கப்பட்ட ஏழு கிலோ உணவு பொருள், பொட்டல விதிகளைமுறையாக பின்பற்றாத, மூன்று கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X