பொது செய்தி

தமிழ்நாடு

கொங்கணகிரியில் தேரோட்டம் பக்தர்கள் குவிந்தனர்

Added : பிப் 10, 2020
Advertisement

அனுப்பர்பாளையம்:திருப்பூர், கொங்கணகிரியில் பிரசித்தி பெற்ற கந்தப் பெருமான் கோவில் உள்ளது. கோவிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு, முன்னதாக மாலை 4:30 மணிக்கு கந்தப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், 5:30 மணிக்கு மஹா தீபாராதனை, 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று தை மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவை தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, பெருளாளர் துரை, துணை தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X