சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருதாநதியில் மணல் கொள்ளை கரைகள் சரிந்து விழும் அபாயம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே மருதாநதியில் மாட்டுவண்டிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் கரைகள் சரிந்து விழுகின்றன.ரெட்டியபட்டி, கீழக்கோவில்பட்டி, சின்னுபட்டி கிராமங்களில் மாட்டுவண்டிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. இவர்கள் கரைகளை அடியிலிருந்து அள்ளுவதால் பல இடங்களில் சரிந்து விழுந்துள்ளன. ஆற்றில் நீர் வரும் காலங்களில் நிலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே மருதாநதியில் மாட்டுவண்டிகள் மணல்
கொள்ளையில் ஈடுபடுவதால் கரைகள் சரிந்து விழுகின்றன.

ரெட்டியபட்டி, கீழக்கோவில்பட்டி, சின்னுபட்டி கிராமங்களில் மாட்டுவண்டிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. இவர்கள் கரைகளை அடியிலிருந்து அள்ளுவதால் பல இடங்களில் சரிந்து விழுந்துள்ளன. ஆற்றில் நீர் வரும் காலங்களில் நிலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விவசாயம் அரிதாக இருப்பதால் மாட்டு வண்டிகளிடமிருந்து ஆற்றை
காப்பாற்ற முடியவில்லை. வருவாய்த் துறையிடம் முறையிட்டால் மாட்டு வண்டிக்
காரர்களை ஒன்றும் செய்ய முடியாது என நலுவி செல்கின்றனர்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கால் மாட்டு வண்டிக்காரர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ஆற்றை பாழ் படுத்துவதுடன், விவசாய நிலங்களையும் குறி வைக்கின்றனர். மாவட்ட
நிர்வாகம் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாட்டு வண்டிகளை பிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X