தண்ணீர் வசதியில்லாத பள்ளிகள் நடவடிக்கை எடுக்குமா கல்வித்துறை

Added : பிப் 10, 2020
Advertisement

சின்னாளபட்டி:திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளில் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தாததால்
மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

திண்டுக்கல்லில் அரசு பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளன. இவற்றிற்கு
தேவையான தண்ணீர் ஆதாரத்திற்கு உள்ளாட்சி நிர்வாகங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
திறந்தவெளி பயன்பாட்டை தவிர்க்க கழிவறை, சுகாதாரமான குடிநீர் வசதிகளை அளிக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

ஆனால், பல இடங்களில் தண்ணீர் வசதி இருந்தும், மின்கட்டண பிரச்னையால் மோட்டார்களை இயக்கி பள்ளிகளுக்கு தண்ணீர் விநியோகிப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும் செயல்பாட்டை துவக்குவதில் தாமதம் காட்டி வருகின்றனர். ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ஆத்துார் ஒன்றியத்தின் பல பள்ளிகளில்
குடிநீரின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

தண்ணீர் வசதியில்லாததால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலை மாற உடனே பள்ளிகளில் தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'', என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X