தமிழ்நாடு

அதிகரிப்பு உரம் பூச்சிக்கொல்லி மருந்துகளில் போலி... இயற்கை உரம் என்ற பெயரில் மோசடி

Added : பிப் 10, 2020
Share
Advertisement
கம்பம்:போலி உரம், பூச்சி மருந்துகள் பயன்பாடு மாவட்டத்தில் அதிகரித்துதுள்ளது. வேளாண் தரக்கட்டுப்பாடு பிரிவு, அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர்.தேனி மாவட்டம் வேளாண், தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு தோட்டக்கலை, வேளாண் பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் உரம், பூச்சி மருந்துகள் ரூபாய் கோடிக்கிற்கு விற்பனையாகிறது.

கம்பம்:போலி உரம், பூச்சி மருந்துகள் பயன்பாடு மாவட்டத்தில் அதிகரித்துதுள்ளது. வேளாண் தரக்கட்டுப்பாடு பிரிவு, அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர்.

தேனி மாவட்டம் வேளாண், தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு தோட்டக்கலை, வேளாண் பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் உரம், பூச்சி மருந்துகள் ரூபாய் கோடிக்கிற்கு விற்பனையாகிறது. மாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட உரம், பூச்சி மருந்து கடைகள் உள்ளன. இதில் போலிகள் அகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை உரங்கள் என்ற பெயரில் அதிக போலி உரங்கள் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.கடந்தாண்டு கோம்பை அருகே போலி உரத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. ரூ. பல லட்சம் மதிப்புள்ள போலி உரம் பறிமுதல் செய்தனர்.கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சம்பவத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்க வில்லை.

அனுமதியின்றி உரத்தொழிற்சாலை நடத்தியது, சரியான விகிதங்களில் மூலப்பொருள்கள் இல்லாதது. பிற நிறுவனங்களின் பெயர்களில் போலியாக லேபிள் தயாரித்து பயன்படுத்தியது, விவசாயிகளை ஏமாற்றியது என பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் முறையான நடவடிக்கை இல்லை.

அதற்கு முன் கம்பத்தில் போலி பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பரவலாக போலி உரம் மற்றும் பூச்சி மருந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகளை நேரில் சந்தித்து, விலை குறைவாக தருகிறோம் என்று கூறி விற்பனை செய்கின்றனர்.எனவே, போலி உரம், பூச்சி மருந்துகள் விற்பனையை தடுக்க தேவையான நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X