சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புஷ்பா தியேட்டர் தரைமட்டம்: அ.தி.மு.க., பிரமுகர் உட்பட 4 பேர் மீது வழக்கு

Added : பிப் 10, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 'புஷ்பா தியேட்டர்' கட்டடத்தை இடித்து தரைமட்டம் செய்தது தொடர்பாக, அ.தி.மு.க., பிரமுகர் உட்பட, நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:திருப்பூர் நாராயணசாமி நகர், பிரிட்ஜ்வே காலனி விரிவை சேர்ந்தவர் முத்துராஜன், 70. இவர் உள்ளிட்ட, 16 பேருக்கு, பெருமாநல்லுார் ரோட்டில் புஷ்பா தியேட்டர் என்ற பெயரில் கட்டடம் உள்ளது. பங்குதாரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருப்பூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் முத்துராஜன் வழக்கு தொடர்ந்தார். பங்குதாரர்களும் தங்கள் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ளது.கடந்த மாதம் 15ம் தேதி முத்துராஜன் சொந்த வேலையாக வெளியூர் சென்ற போது, ஒரு கும்பல் தியேட்டர் கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். கட்டடத்தில் இருந்த விலைமதிப்புமிக்க பொருட்களையும் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த முத்துராஜன், அவர்களை போனில் அழைத்து கேட்ட போது, சரியான பதிலளிக்கவில்லை. சம்பவம் தொடர்பாக, பங்குதாரர்களின் மகன், அ.தி.மு.க., பிரமுகர் ஆகியோர் அழைத்து முத்துராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வடக்கு போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, அ.தி.மு.க, பிரமுகர் கருவம்பாளையம் மணி, பங்குதாரர்களின் மகன்கள் ரமேஷ், கிரிதர தீபன், காந்திபாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X