சம்பவம் செய்தி

தமிழ்நாடு

500 ஏழை குடும்பங்களுக்கு நல உதவிகள்

Added : பிப் 10, 2020
Advertisement

அனுப்பர்பாளையம்,:திருப்பூர், செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் பிரசித்தி பெற்ற சுடலை மகாராஜா, ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன் கோவில்கள் உள்ளன. சர்வசக்தி ஜன பேரவை நிறுவனத்தலைவர் சுரேஷ் சுவாமிகள் பிறந்த நாள் விழா நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. சுரேஷ் சுவாமிகள், தலைமை வகித்து, 500 ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஆயிரத்து 500 பேருக்கு சேலை உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.முன்னதாக காலை திருப்பூர் பெரியாயிபாளையம் கருணை இல்லம், செங்கப்பள்ளி மகிழ்ச்சி முதியோர் இல்லம், ஆதியூர் பிரிவில் உள்ள அன்னையர் முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கு வேஷ்டி, சேலை, பனியன், மதிய உணவு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, சர்வசக்தி ஜன பேரவை மாவட்ட தலைவர் யுவராஜ், மாநில துணை பொது செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாநில இளைஞர் அணி தலைவர் முத்து சதீஷ், மாவட்ட பெருளாளர் சதீஷ் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X