தேவைக்கரம் நீட்டும் முன்பு சேவைக்கரம் நீட்டுங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தேவைக்கரம் நீட்டும் முன்பு சேவைக்கரம் நீட்டுங்கள்'

Added : பிப் 10, 2020
Share
திருப்பூர்;'தேவை கரம் நீள்வதற்கு முன் சேவை கரம் நீட்டுபவர்கள் உலகில் தாய்க்கு நிகரானவர்கள்; அவர்களையே முதலில் வணங்க வேண்டும்,' என, கவிஞர் அப்துல்காதர் பேசினார்.திருப்பூரில், புத்தக திருவிழா ஜன., 30ம் தேதி துவங்கியது. தினமும் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று நிறைவு விழா நடந்தது. தொடர்ந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரிதும் தேவைப்படுபவர்கள்

திருப்பூர்;'தேவை கரம் நீள்வதற்கு முன் சேவை கரம் நீட்டுபவர்கள் உலகில் தாய்க்கு நிகரானவர்கள்; அவர்களையே முதலில் வணங்க வேண்டும்,' என, கவிஞர் அப்துல்காதர் பேசினார்.திருப்பூரில், புத்தக திருவிழா ஜன., 30ம் தேதி துவங்கியது. தினமும் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று நிறைவு விழா நடந்தது. தொடர்ந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரிதும் தேவைப்படுபவர்கள் வல்லவர்களா...நல்லவர்களா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.கவிஞர் வாணியம்பாடி அப்துல்காதர் பேசியதாவது:தெய்வம் பொது. வாழும் வரை நம் காலுக்கு கிழே இருக்கிற பூமி. இறந்த பின் நாம் மேலே மண்ணாக வரும். ஆயிரம் புனித நதியின் தீர்த்தத்தை விட, ஆயிரம் அபிேஷகங்களை விட, தொழிலாளியின் வியர்வைக்கு மதிப்பு அதிகம். தேவை கரம் நீள்வதற்கு முன் சேவை கரம் நீட்டுபவர்கள் உலகில் தாய்க்கு நிகரானவர்கள். அவர்களையே முதலில் வணங்க வேண்டும்.இவ்வாறு, அப்துல்காதர் பேசினார். திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகி சுப்ரமணியம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X