ரோடு சேதம்

Added : பிப் 10, 2020
Advertisement

ரோடு சேதம்

ஆண்டிபட்டியில் இருந்து முத்துகிருஷ்ணாபுரம் வழியாக முதலக்கம்பட்டி செல்லும் ரோடு பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.கந்தசாமி, ஆண்டிபட்டி

சுகாதாரக்கேடு

ஜம்புலிபுத்துார் பின்புறம் வைகை அணை செல்லும் ரோட்டை இரவில் சிலர் திறந்த வெளிக்கழிப்படமாக்குவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.இங்கு பொதுக்கழிப்பிட வசதியை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.ஈஸ்வரன், ஜம்புலிபுத்துார்

போடி அருகே சிலமலை டி.எஸ்.பி., காலனியில் பல ஆண்டுகளாக சாக்கடை வசதியின்றி உள்ளது. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை மக்கள் வீடுகளுக்கு முன் குழிகள் தோண்டி நிரப்பி வருகின்றனர். வாரத்திற்கு ஒருநாள் அவர்களே அப்புறப்படுத்தி சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக சுகாதாரகேடு ஏற்படுகிறது. சாக்கடை வசதி செய்து தர சிலமலை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.முருகேஸ்வரி, சிலமலை.

போக்குவரத்து நெருக்கடி

ஆண்டிபட்டி நகர் பகுதியில் ரோட்டின் ஓரங்களில் நடைபாதை கடைகள் பெருகி வருகிறது. இக்கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் தனியாக இடம் ஒதுக்கி போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வேண்டும்.

-எஸ்.சுந்தரம், ஆண்டிபட்டி

வீணாகும் குடிநீர்

ஆண்டிபட்டியில் ஆர்.ஐ.,அலுவலக வளாகத்தில் குடிநீர் கேட்வால்வு உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.பார்த்திபன், ஆண்டிபட்டி

சுற்றுச்சுவர் சேதம்

போடி அருகே ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மயான சுற்றுச்சுவர் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. அருகே கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நடந்து செல்வோர் சுகாதாரக்கேடால் அவதிப் படுகின்றனர். சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைப்பதோடு, குப்பையை அகற்ற ராசிங்காபும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

.டி.ராஜசேகர், ராசிங்காபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X