பொது செய்தி

தமிழ்நாடு

பூஜ்ய முதலீட்டில் எளிய படைப்புகள் : ஆடல், பாடலுடன் கற்பித்தல் பணி

Added : பிப் 10, 2020
Advertisement
 பூஜ்ய முதலீட்டில் எளிய படைப்புகள் : ஆடல், பாடலுடன் கற்பித்தல் பணி

தேனி:கல்வி வியாபாரமாக மாறிய இக் காலகட்டத்தில் மாணவர் திறமை, சிந்தனையை துாண்டும் நிகழ்வுகள் குறைவு. திறமையை சோதிக்க புதிய 'புராஜெக்ட்' செயய கூறினால் ரெடிமேடாக விலைக்கு வாங்கி தான் செய்ததாக கணக்கு காட்டுகின்றனர்.

இதன் நோக்கம், பயன், பலன் என மாணவர்கள் அறிய வாய்ப்பில்லை. இந்நிலை மாற்ற முதலில் கற்பித்தலில் புது முயற்சியாக வகுப்பறையில் அனுபவ பூர்வமாக கற்றல் சூழ்நிலை வளர்க்க ஒருங்கிணைந்த கல்வி திட்டம் ஸ்ரீஅரபிந்தோ சொைஸட்டியும் இணைந்து முதலீடில்லா கண்டுபிடிப்புகளை மாவட்டங்கள் தோறும் நடத்துகிறது.

ஆசிரியர் பயிற்சியில் சிறந்த ஐ.டி.க்கள் வழங்கிய 300 ஆசிரியர்களை தேர்வு செய்தது. இவர்களுக்கு தேனி கம்மவார் கல்வியியல் கல்லுாரியில் 'பூஜ்ய முதலீட்டில் புத்தாக்க கண்காட்சி' மூன்று நாட்கள் நடந்தது. இதில் அரசு, உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

புதிய ஐ.டி.யா மூலம் எளிமையாக எவ்வாறு கற்பித்தல் என்பதை விளக்கினர். ஆசிரியரின் எளிய கண்டுபிடிப்பு அடுத்த கல்வியாண்டில் மற்றவர்கள் பின்பற்றி செயல்படுத்துவதே இதன் நோக்கம்.ஒவ்வொரு அரங்கமும் கல்வியை இப்படியும் எளிதாக கற்றுத்தர முடியுமா என மற்ற ஆசிரியர்களின் சிந்தனையை துாண்டியது. ஆசிரியர்கள் புது, புது ஐ.டி.யாக்களை உருவாக்கினர்.

சிறந்த படைப்புகள், ஆசிரியர்கள், தேசிய, மாநில அளவில் தேர்வு செய்து மனித வளமேம்பாட்டு துறை விருதுக்கு பரிந்துரைக்கப்படும். பரமபதம் விளையாட்டு: வகுப்பறை, புத்தகம்தான் கல்வி என்றில்லாமல் விளையாட்டாகவும் கற்கலாம் என்பதை கன்னியப்பிள்ளைபட்டி ஊ.ஓ. ஆரம்ப பள்ளி, பரமபதம் வரைந்து 'கணினி பயன்பாடு நன்மை, தீமை' என்ற கருத்தை வெளிப்படுத்தினர். கம்ப்யூட்டரால் ஏற்படும் நன்மை ஏணியாகவும், தீமைகள் , பாம்பின் தலையாக விளக்கினர்.

ஜெயந்தி (ஆசிரியை): இதை இரு குழுவாக மாணவர்கள் விளையாடலாம். கணினி, அலைபேசி பார்க்காதே என்றால் அதை ஏற்பதில்லை. பரமபதத்தில் விளையாட்டாக ஆகும் போது மனதை தொடும். கணினி அதிக நேரம் பார்த்தால் கண்பார்வை பாதிக்கபடும், வாசிப்பு திறன் குறையும். மனம் அலைபாயும் என உணர்வார்கள். நன்மை என்பதில் கம்ப்யூட்டரில் விபரங்கள் விரல் நுனியில் வைத்து கொள்லாம்.

நாட்டு நடப்பு, இணையதளம் கல்வியில் பயன்படும். குழுவாக விளையாடுவதால் வெற்றி தோல்வியை சமமாக கருதும் மனநிலை உருவாகும். எந்த பாடத்தலைப்புகளையும் பரமபதத்தில் கொண்டுவரலாம்..

தசம எண் விளையாட்டு:ஜி.கே.பி.எஸ். முத்தனம்பட்டி அரசு கள்ளர் ஆரம்ப பள்ளி ஆசிரியை

கலர், கலர் பாசிகளை அட்டைகளில் ஒட்டி எண்ணிக்கையில், கூட்டல், கழித்தல், பெரிய எண், சிறிய எண் எளிதாக அறியலாம். அட்டை பின் பகுதியில் காந்தம் வைத்து பூனை மேஜையில் மேல் ஏறி, இறங்கும் விளையாட்டு. துண்டு காகித காலண்டரில் முக்கிய நாட்கள் அறிய எளிதாக காட்சி படுத்தப்பட்டது.

ராமா ஆசிரியை: ஆரம்ப வகுப்புகளில் எண்களை பிரித்து கூற சிரமம்படுவார்கள், அதை விளையாட்டுபோல் செய்தால் மறக்க மாட்டார்கள் எளிதாக மனதில் பதியும். உருளை வடிவ அட்டைக்குள் ஒன்று, பத்து, நுாறு, ஆயிரம் , லட்சம் என எத்தனை இலக்கங்களை தசம எண்கள் சரியாக கூறுகிறார்கள்.

பாடல் மூலம் அல்ஜிப்ரா:

டி.வாடிப்பட்டி ஊ. ஓ., நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மீனவர் போல் தொப்பி, துாண்டிலுடன் 'ஏலேலோ ஐலஸா' பாடலில் துாண்டிலில் சிக்கும் அட்டை மீன்களை எடுத்து அதில் ஆங்கில எழுத்துக்கள் எண்களை எவ்வாறு குறிக்கிறது என்பதையும், பாடலில் செ.மீ. டெ.மீ., மீட்டர், டெ.கா. மீ., எக்டர், கி.மீ. மி.மீ., விபரங்களை பாடி கவனத்தை ஈர்த்தனர்.

மணிமேகலை, ஆசிரியை: அல்ஜிப்ரா கணிதம் கஷ்டம் என நினைக்கிறார்கள். ஆங்கில எழுத்துக்களில் வரும் மதிப்புகளை மறக்காமல் இருக்க பாடல்களாக எழுதி, துாண்டில் மீன் பிடிப்பது போன்ற காட்சி உருவாக்கியுள்ளேன். எண்கள் மதிப்பு மாறாது. எளிய முறையில் கணிதம் கற்க உதவும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X