பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் அடைப்பால் வெள்ளக்காடாகும் சாலை

Added : பிப் 10, 2020
Advertisement
 வடிகால் அடைப்பால்  வெள்ளக்காடாகும் சாலை

திருவொற்றியூர்:மழை நீர் வடிகால் அடைப்பால், கழிவு நீர் வெளியேறி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை அடிக்கடி வெள்ளக்காடாக மாறி, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி - விம்கோ நகர் வரை, மழைநீர் வடிகால் வசதி உள்ளது. இதில் சேகரமாகும், மழைநீர் மற்றும் கழிவுநீர், சுங்கச்சாவடி, ராஜாகடை, எல்லையம்மன் கோவில், விம்கோ நகர் எம்.ஆர்.எப்., சாலை வழியாக, கடலில் கலக்கும் வகையில் அமைப்பு உள்ளது.திருவொற்றியூர் பேருந்து நிலையம் - விம்கோ நகர் வரையிலான, மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக், குப்பையால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இடைப்பட்ட துாரத்தில், தனியார் தொழிற்சாலைகள் முறைகேடாக, வடிகாலில் கழிவு நீர் கலக்க செய்வதால், மழை நீர் வடிகால் துளை வழியாக வெளியேறும் கழிவு நீர், அடிக்கடி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தேங்கி விடுகிறது.ஏற்கனவே, இச்சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடப்பதால், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. கழிவு நீர் தேங்கி நிற்பதால், பள்ளம் மேடு தெரியாமல், வாகன ஓட்டிகள் விழுந்து காயமுறுகின்றனர். இச்சாலையை பராமரிக்கும் பணியை, மெட்ரோ ரயில் கட்டுமான நிர்வாகம்சுதாரித்து, மழைநீர் வடிகால் அடைப்பை சரிசெய்து, சாலையில், கழிவு நீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X