காளைகளுக்கு 'டோக்கன்' வழங்குவதில் சிக்கல் அய்யம்பட்டி கிராம கமிட்டியினர் அவதி

Added : பிப் 10, 2020
Advertisement

சின்னமனுார்:அய்யம்பட்டிஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு 'டோக்கன்'
வழங்குவதில் சிக்கல்நீடிக்கிறது. அரசு அலுவலர்கள் 'டோக்கன்' கேட்டு மிரட்டுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க கிராம கமிட்டி கோரிக்கை வைத்துள்ளனர்.

அய்யம்பட்டி வல்லடிகார சுவாமி, ஏழைகாத்தம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு பிப்., 16ல் ஜல்லிக்கட்டுநடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் விழா கமிட்டியினர் ஈடுபட்டு
உள்ளனர். நேற்று, வாடிவாசல் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது. மேடை, பாதுகாப்பு வேலி, பார்வையாளர்கள் கேலரி, வி.ஐ.பி.,கள் அமரும் பகுதி அமைக்கும் பணிகள் நடக்கிறது.

போட்டியில் 600 காளைகள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தேனி,
திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், விருதுநகர், சேலம் மாவட்ட
காளைகளுக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களிலிருந்து காளைகள்
வருவதால், மாடு வளர்ப்பவர்கள் அனைவருக்கும் 'டோக்கன்'வழங்க முடியவில்லை. இதனால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கிராம கமிட்டியினர் கூறுகையில், 'பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், தங்கள்
மேலதிகாரிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்'டோக்கன்' வழங்க வேண்டுமென்று நிர்பந்தம் செய்கின்றனர். காளைகளை நேரில் பார்க்காமல் 'டோக்கன்' வழங்க முடியாதென்று கூறினால், 'எங்களை மீறி எப்படி ஜல்லிக்கட்டு நடத்துவீர்கள்,' என்று மிரட்டுகின்றனர். போட்டி நேரத்தை அதிகரித்து கூடுதல் எண்ணிக்கையில் காளைகள் பங்கேற்கவும், அரசு அலுவலர்கள்
மிரட்டுவதை தடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X