மரக்கன்றுகளை நீர் ஊற்றி காப்பாற்றிய இளைஞர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகளை நீர் ஊற்றி காப்பாற்றிய இளைஞர்கள்

Added : பிப் 10, 2020
Share

கூடலுார்:கூடலுாரில் சாலையோரங்களில் நடவு செய்த மரக்கன்றுகள் கடுமையான
வெப்பத்தால் கருகும் நிலையில், சோலைக்குள் கூடல் அமைப்பைச்சேர்ந்த இளைஞர்கள் அதற்கு நீர் ஊற்றி காப்பாற்றினர்.

கூடலுாரில் சோலைக்குள் கூடல் என்ற அமைப்பில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
உள்ளனர். 3 ஆண்டுகளாக கூடலுார் முக்கிய தெருக்கள், ஒட்டான்குளம் கண்மாய் கரை,
தாமரைக்குளம் ரோடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதில் அண்மையில் நடப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கடுமையான வெயிலால் கருகும் நிலையை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பு சார்பில் இளைஞர்கள் தள்ளுவண்டிகளில் நீரை எடுத்துச் சென்று சாலையோரத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு ஊற்றினர்.ஒவ்வொரு ஞாயிற்றுக்
கிழமையும் மரக்கன்றுகள் நடுவது, நட்ட மரக்கன்றுகளை பராமரிப்பது என தொடர்ந்து 141 வாரங்கள் செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X