பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' திருமண மண்டபம் திறப்புக்கு தயார்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 'அம்மா' திருமண மண்டபம் திறப்புக்கு தயார்

ஆவடி:ஆவடியில், 'அம்மா' திருமண மண்டபம், திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.
ஆவடியில், 10.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2018, ஏப்., 23ல், அம்மா திருமண மண்டபகட்டுமான பணிகள் துவங்கின. தற்போது, 29 ஆயிரத்து, 497 சதுரடி பரப்பில், மூன்று மாடி கட்டடமாக உருவாக்கப்பட்டுள்ளது.தரைதளத்தில், துாண்கள் எழுப்பப்பட்டு, 50 நான்கு சக்கர வாகனங்களும், 75 இருசக்கர வாகனங்களும் நிறுத்த, வாகன நிறுத்துமிட வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில், நவீன சமையல் அறை வசதியுடன், 300 பேர் உணவருந்தும் இடம், இரண்டாவது தளத்தில், மணமகன், மணமகள் அறை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
இரண்டாவது தளத்தில்,குளிர்சாதன வசதியுடன், 650 பேர் அமரும் வகையில், விழா மண்டபம், சிறப்பு வசதிகளாக சூரிய தகடு வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள், இந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டு உள்ளன.மூன்றாவது தளத்தில், விருந்தினர் தங்கும் அறை, தனித்தனி கழிப்பறை வசதிகளுடன் கூடிய ஓய்வறை என, தனியார் திருமண மண்டபங்களுக்கு இணையாக, இந்த திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.இம்மாத இறுதிக்குள்,திருமண மண்டபம் திறக்கப்பட இருப்பதால், அதற்கான பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X