கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மெரினா லுாப் சாலையில் ஆக்கிரமிப்பு கூடாது மாநகராட்சி, போலீஸ் கமிஷனருக்கு உத்தரவு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

சென்னை:சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள லுாப் சாலையில், எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் உறுதி செய்யும்படி, மாநகராட்சி மற்றும் போலீஸ் கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதார பாதுகாப்புக்கு, முராரி குழு பரிந்துரைத்த திட்டங்களை அமல்படுத்தவும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரிக்கவும், மெரினா கடற்கரையில் கடைகள், மீன் வியாபாரத்தை ஒழுங்குப்படுத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இம்மனுக்கள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன. மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்கவும், கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது எனவும், முறையான கட்டணத்தை நிர்ணயிக்கவும், நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
மேலும், பட்டினப்பாக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான லுாப் சாலையில், நடைபாதை அமைக்க ஒப்புதல் பெறவும் உத்தரவிட்டிருந்தனர்.வழக்கு, விசாரணைக்கு வந்த போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, தள்ளுவண்டி கடைகள் வாங்குவதற்கு, 'இ - டெண்டர் நோட்டீஸ்' வெளியிட்டதை, தாக்கல் செய்தார். கடைகள் ஒதுக்க கோரும் விண்ணப்ப நகலையும் தாக்கல் செய்து, மார்ச் 15 க்குள், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:லுாப் சாலையில் நடைபாதை அமைக்க, ஒப்புதல் கேட்டு, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்துக்கு, கடிதம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. லுாப் சாலையில், நடைபாதைக்கான நிலப்பரப்பில் ஆக்கிரமிப்புகள் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.எனவே, லுாப் சாலையில் எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் உறுதி செய்யும்படி, மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர்,போக்குவரத்து இணை கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது.ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு, உடனடியாக அகற்ற வேண்டும்.அடுத்த விசாரணையின் போது, புகைப்படத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகளும் ஆஜராக வேண்டும். மீனவர்களுக்கான சலுகைகள் வழங்க ஏதுவாக, அவர்கள் பற்றிய கணக்கெடுப்பு விபரங்களை, மீன்வளத் துறை இணை இயக்குனர் தாக்கல் செய்ய வேண்டும்.இதுவரை கணக்கெடுப்பு நடக்கவில்லை என்றால், அதை மேற்கொள்ள வேண்டும். லுாப் சாலையில், இரண்டு ஏக்கரில் அமைய உள்ள மீன் சந்தையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.விசாரணை, 21 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X