பொது செய்தி

தமிழ்நாடு

உலக மீட்பர் ஆலய திறப்பு விழா

Added : பிப் 10, 2020
Advertisement

தேனி:தேனி - மதுரை ரோட்டில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் 81 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம்' திறப்பு விழா நடந்து.

தேனியில் கத்தோலிக்கர் கிறிஸ்தவர்கள் சார்பில் 1939ல் உலக மீட்பர் ஆலயம் அமைக்கப்
பட்டது. தொடர்ந்து பிரார்த்தனைகள் நடந்து வந்த நிலையில்,சமீபத்தில் கட்டுமான பணி செய்து புதுப்பிக்கப்பட்டது. நேற்று, புதிய ஆலயத்தை மதுரை பேராயர் அந்தோணி பாப்புச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேனி பாதிரியார் ஜான்மார்ட்டின், உதவி பாதிரியார் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தனர். பின்,நடந்த அர்ச்சிப்பு பெருவிழாவில், பாதிரியார்கள், சேவையாளர்கள், திருச்சபை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வாழ்த்துச் செய்தியையும், அருளாசியைம் பேராயர் பாப்புச்சாமி வழங்கினார். சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X