மாவட்ட செஸ் போட்டி: நகர்வுகளால் அசத்தல்

Added : பிப் 10, 2020
Advertisement

கோவை:சதுரங்க கழகத்தின், 80ம் ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான செஸ் போட்டி, சர்வஜனா பள்ளி வளாகத்தில் நடந்தது.கோவை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் சர்வஜனா பள்ளி இணைந்து நடத்திய இப்போட்டியில், 1-5 வகுப்பு மாணவ, மாணவிகள், 6-9 வகுப்பு மாணவ, மாணவிகள் என, இரண்டு பிரிவுகளாக மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.80 பள்ளிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஐந்து சுற்றுகளாக போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற பள்ளி அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.முன்னதாக, போட்டியை கோவை சதுரங்க கழகத்தின் துணை தலைவர் விஜயகுமார் மற்றும் முத்துசாமி ஆகியோர், துவக்கி வைத்தனர். கழகத்தின் செயலாளர் தனசேகர் மற்றும் நடுவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X