பொது செய்தி

தமிழ்நாடு

'படிப்பு மட்டுமல்லாமல் பொழுதுபோக்கும் வேண்டும்'

Added : பிப் 10, 2020
Advertisement
 'படிப்பு மட்டுமல்லாமல் பொழுதுபோக்கும் வேண்டும்'

எஸ்.எஸ்.வி.எம்., 20வது ஆண்டு விழாமேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்களின், 20வது ஆண்டு விழா, பள்ளியில் நடந்தது.பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் தலைமை வகித்தார். அறங்காவலர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர் தலைவர் அலோக் கே பிள்ளை வரவேற்றார்.தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனத்தின் தலைவர் சந்தர சர்மா பேசுகையில், ''கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு உலகளாவிய கல்விமுறையை கொண்டுவந்து, வாழ்வில் மென்மேலும் சாதனைகளைப் படைக்க துாண்டு வது, அசாத்திய தைரியம். அதற்கு அடித்தளமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்,'' என்றார்.விழாவில், 512 மாணவ, மாணவிகளைக் கொண்ட, 'விஸ்மயா சப்தா' என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.பிருந்தாவன் பள்ளி ஆண்டு விழாகோவை, மதுக்கரை, குரும்பபாளையம் பிரிவிலுள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. தாளாளர் வசந்தராஜன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, நடிகர் சாந்தனு பாக்யராஜ் பேசுகையில், ''மாணவர்களுக்கு படிப்பு மற்றும் பொழுதுபோக்கு இரண்டுமே தேவை. அதனை சரியான அளவில், கலவையாக கொண்டு இருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து பயணிக்க, பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பள்ளி அறங்காவலர்கள் திருமூர்த்தி, அமிர்தலிங்கம், கல்வி குழும நிறுவனர் கனகாட்சலம், பெற்றோர், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.விஷ்ணு வித்யாலயாபள்ளி ஆண்டு விழாவரதராஜபுரத்தில் உள்ள, விஷ்ணு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.பள்ளி தாளாளர் ஜெயமணி, செயலாளர் ராமசாமி தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் ரேவதி ஆண்டறிக்கை வாசித்தார். 'தினமலர்' மாணவர் பதிப்பு சார்பில் நடந்த, மாவட்ட அளவிலான வினாடி - வினா போட்டியில், ஐந்தாம் இடம் பிடித்த மாணவர்கள் பாராட்டப்பட்டனர். டாக்டர் சுரேஷ், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.கல்லுாரியில் தேசிய கருத்தரங்குஇந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் 'வணிக சூழலில் மாற்றமும், மாற்றத்தை தழுவுதலும்' என்ற தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.கல்லுாரியின் இளங்கலை மேலாண்மை, கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை சார்பில், இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இதில் கோவையின் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக மைப்ரோமோ வீடியோஸ் தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் பங்கேற்றார். அப்போது தற்போதைய தொடக்க நிறுவனங்கள், அவை எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு கிடைக்கும் வளங்கள் குறித்து எடுத்துரைத்தார்.இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X