பொது செய்தி

தமிழ்நாடு

விதைப்பந்து தூவி மாணவர்கள் 'ஸ்கேட்டிங்' பயணம்

Added : பிப் 10, 2020
Advertisement

கம்பம்:புவி வெப்பமயமாதலை குறைப்பதற்காக காமயகவுண்டன்பட்டி முதல் கம்பமெட்டு
வரை மாணவர்கள் விதைப்பந்து துாவி சென்றனர்.

காமயகவுண்டன்பட்டி 'ஸ்கேட்டிங் அகடாமி 'சார்பில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புவி வெப்பமயமாதலை தடுக்கும் வண்ணம் விழிப்புணர்வு 'ஸ்கேட்டிங்' பயணம் மேற்கொண்டனர்.

நேற்று காலை காமயகவுண்டன்பட்டி கருப்பசாமி கோயில் அருகிலிருந்து இந்த பயணம்
துவங்கியது. துவக்க விழாவிற்கு உத்தமபாளையம் டி.எஸ்.பி. சின்னக்கண்ணு தலைமை வகித்தார். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி முன்னிலை வகித்தார். ராயப்பன்பட்டி எஸ்.ஐ., மாயன் வரவேற்றார். விழிப்புணர்வு மற்றும் விதைப்பந்து துாவும் பயணத்தை துவக்கி வைத்து டி.எஸ்.பி., சின்னகண்ணு வாழ்த்தி பேசினார்.இப் பயணத்தின் போது ரோட்ரோங்களில் 20 ஆயிரம் விதைபந்துகளை துாவினர்.

காமயகவுண்டன்பட்டி சுகாதார நிலைய டாக்டர் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன்,
பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன், கஸ்துாரிபாய் பள்ளிகளின் தாளாளர் மோகன்தாஸ், கம்பம் டிராபிக் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஸ்கேட்டிங் பயிற்சியாளர் நாகராஜ், பாண்டிமகாதேவன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X