பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளியை தத்தெடுத்து புனரமைத்த வியாசர்பாடி போலீசார்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 மாநகராட்சி பள்ளியை தத்தெடுத்து புனரமைத்த வியாசர்பாடி போலீசார்

வியாசர்பாடி:அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி காட்சியளித்த மாநகராட்சி பள்ளியை, வியாசர்பாடி போலீசார் தத்தெடுத்து, புனரமைத்து, மாணவர்களுக்கு வழங்கினர்.
வியாசர்பாடி, மெகசின்புரத்தில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதிய அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி செயல்பட்டு வந்த இப்பள்ளியை, வியாசர்பாடி போலீசார் தத்தெடுப்பு நிகழ்ச்சி நடந்தது.புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளி மாணவ - மாணவியருக்கு, அறிவுரைகள் வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு, கேரம் போர்டு, செஸ், கால்பந்துகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை பரிசுகளாக வழங்கி, பள்ளி வளாகத்தில், 15க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பள்ளி தத்தெடுப்பு நிகழ்ச்சியில், போலீசார் சார்பில், 2 லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி கட்டடத்திற்கு வர்ணம் தீட்டப்பட்டு, தனியார் பள்ளிக்கு நிகராக காட்சியளித்தது. பள்ளிக்கு வேண்டிய விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வேண்டிய அனைத்து உதவிகளும், வியாசர்பாடி போலீசார் சார்பில் செய்து தரப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X