பொது செய்தி

தமிழ்நாடு

உங்க போனை 'அப்டேட்' பண்ணியாச்சா? வங்கி தகவல்கள், பர்சனல் படங்கள் திருடும் அபாயம்

Added : பிப் 10, 2020
Advertisement
 உங்க போனை 'அப்டேட்' பண்ணியாச்சா? வங்கி தகவல்கள், பர்சனல் படங்கள் திருடும் அபாயம்

கோவை;'வாட்ஸ்ஆப்' போன்ற சமூகவலைதளங்களில், 'ஹேக்கர்ஸ்' ஊடுருவி, தகவல்களை திருட முயற்சிப்பதாக, 'சைபர் க்ரைம்' போலீசில் புகார்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன; இதனை தவிர்க்க, ஒவ்வொருவரும் தங்கள் மொபைல்போனில் அவ்வப்போது, 'அப்டேட்' செய்ய வேண்டும் என, போலீசார் எச்சரிக்கின்றனர்.'பேஸ்புக்', இன்ஸ்டாகிராம், 'வாட்ஸ்ஆப்' போன்ற சமூக வலைதளங்களை, பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, 'வாட்ஸ்ஆப்' சமூக வலைதளத்தை உலகம் முழுவதும், பல கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.இந்த ஆப் மூலம் தகவல்கள், புகைப்படங்கள், 'வீடியோ' உள்ளிட்டவை பகிரப்படுகின்றன.இதிலுள்ள 'வாய்ஸ் காலிங்' மூலம், உலகின் எந்த இடத்தில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு, கட்டணமில்லாமல் பேச முடியும். பல கோடி பயனாளர்களை கொண்டுள்ள இந்த 'வாட்ஸ் அப்'பில் ஊடுருவி, பயனாளிகளின் தகவல்களை திருட, 'ஹேக்கர்கள்' முயற்சி செய்து வருகின்றனர்.இது குறித்து, சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது:அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிப்போர், இப்போதெல்லாம் தங்களது மொபைல்போன் மூலம் எவ்வித வீடியோ, புகைப்பட தகவலும் பரிமாற்றம் செய்வதில்லை.தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற, திறமை வாய்ந்த இணைய உளவாளிகளை வைத்து, பயனாளர்களின் வாட்ஸ்ஆப்பில் ஊடுருவ, முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பிட்ட நபர்களின் மொபைல் போன்களுக்கு, 'வாட்ஸ்ஆப் காலிங்' வசதி மூலம், ஹேக்கர்ஸ் அழைப்பு விடுக்கின்றனர்.இந்த அழைப்பை ஏற்றதும், அந்த மொபைல்போனில் 'உளவு சாப்ட்வேர்' தானாக பதிவிறக்கமாகிறது. இதன்பின் அந்த எண்ணை, ஹேக்கர்ஸ் கண்காணிக்க துவங்குகின்றனர். குறிப்பிட்ட நபரின் மொபைல்போனில் உள்ள தகவல்கள் திருடப்படுகின்றன. அழைப்புகளும் ஒட்டு கேட்கப்படுகின்றன.இதனை தடுக்க, நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கிய அப்டேட்கள் உள்ளன. இதனை அவ்வப்போது பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து, ஹேக்கர்கள் ஊடுருவாமல் இருக்க, விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.சிக்கும் இளம்பெண்கள்!வாட்ஸ்ஆப் மூலம் தங்களது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை காதலன், நண்பர்களுக்கு அனுப்பும் செயல்களில், சில இளம் பெண்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சிலர் தொழில் ரீதியான ரகசிய விஷயங்களை பகிர்கின்றனர். இந்த தகவல்கள் ஹேக்கர்களுக்கு கிடைத்தால், அதனை வைத்து மிரட்டுவது, பணம் கேட்பது போன்ற செயல்கள் நடக்கும் என, எச்சரிக்கின்றனர் போலீசார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X