பொது செய்தி

தமிழ்நாடு

'ராமனை மகனாக பெற்றவளுக்கு துயரம் வந்த ரகசியம் என்ன?'

Added : பிப் 10, 2020
Advertisement
 'ராமனை மகனாக பெற்றவளுக்கு துயரம் வந்த ரகசியம் என்ன?'

கோவை:கோவை கம்பன் கழகம் சார்பில், 48ம் ஆண்டு கம்பன் விழா நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, கம்பன் கழக பொருளாளர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். இணைச்செயலாளர் முருகேசன் வரவேற்றார்.சிந்தனை அரங்கம் நிகழ்வில், பேராசிரியர் குருஞானாம்பிகா பேசியதாவது:ராமாயணத்தில், கூனி சென்று கைகேயியிடம், 'உனக்கு பெரும் துயரம் வரப்போகிறது' என்கிறாள். அதற்கு கைகேயி, 'நல்ல குழந்தைகளை பெற்றவர்களுக்கு, எந்த துயரும் வராது. அதிலும், ராமனை மகனாக பெற்ற எனக்கு, எப்படி துயரம் வரும்' என்கிறாள்.தான் பெற்ற மகன் பரதனை விட, ராமன் மேல் இருக்கும் பேரன்பை, கைகேயி வெளிப்படுத்துகிறாள். இப்படி அன்பே வடிவான கைகேயி, எப்படி ராமனை காட்டுக்கு அனுப்பினாள் என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான பதில் ராமனுக்கும், கைகேயிக்கும் மட்டும்தான் தெரியும். ராமாயணத்தில் வேறு எந்த கதாபாத்திரத்துக்கும் இதன் ரகசியம் தெரியாது.இவ்வாறு, அவர் பேசினார். கவிஞர் உமாகேஸ்வரி, புலவர் ராமன், பேராசிரியர் புவனா ஜீவானந்தம், உள்ளிட்டோர் வேறு தலைப்புகளில் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X