பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு சீரமைப்பு பணி: தூசியை தடுக்க நீர் தெளிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் ரோடு அமைக்க கொட்டப்பட்ட கற்கள், தூசியால்
பொதுமக்கள் சிரமத்தை குறைக்க தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

வட மாவட்டங்களில் இருந்து வைகை அணை, மூணாறு, தேக்கடி செல்லும் சுற்றுலா
வாகனங்கள் மற்றும் ஜெயமங்கலம் டாடா காபி கம்பெனி, ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் தேவதானப்பட்டியில் இருந்து டி.வாடிப்பட்டி,
சில்வார்பட்டி வழியாக செல்கின்றன.

இந்நிலையில் சில்வார்பட்டி ஒண்டிவீரையா சுவாமி கோயிலில் இருந்து வடக்கு காலனி வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு சேதம் அடைந்து இருந்தது. தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு சீரமைக்கும் பணி துவங்கியது. இதற்காக ரோட்டில் ஜல்லி, கிரஷர் கலவை ரோட்டில் கொட்டப்பட்டது. கலவை உலர, உலர தூசி பறந்தது. அதன் மீது நீர் தெளிக்க வில்லை. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ரோட்டில் தூசி பறப்பதை தடுக்க சில்வார்பட்டி ரோட்டில் தண்ணீர் தெளிக்கப்
படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X