பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் புகார் பெட்டி; கண்காணிக்க உத்தரவு: ஆசிரியர் மீது பாலியல் புகார் எதிரொலி

Added : பிப் 10, 2020
Advertisement

கோவை:அன்னுார், காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டியை, தினசரி கண்காணிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளின் நிர்வாக நடைமுறை விதிகளின்படி, புகார் பெட்டி வைத்திருப்பது அவசியம். மாணவர், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும், தலைமையாசிரியரிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத புகார்களை, இப்பெட்டியில் எழுதி போடலாம்.இதில் கடிதங்கள் ஏதேனும் இருந்தால், உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அதை பெற்றோர் ஆசிரியர் கழகம், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது, தலைமையாசிரியரின் கடமை.அன்னுார், காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் பாட ஆசிரியர் நடராஜன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும், பள்ளியில் வைக்கப்பட்ட புகார் பெட்டியின் மூலமே, வெளிச்சத்திற்கு வந்தது.நிர்வாக ரீதியாக, ஆசிரியர் நடராஜனை கண்டிக்காததோடு, இப்புகாரை முதன்மை கல்வி அலுவலர் கவனத்துக்கும் கொண்டு செல்லவில்லை. இதனால் அத்துமீறிய ஆசிரியர் மீது, போலீசாரிடம் புகார் பதிவு செய்த பின்பு தான், நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியரை, பணியிடை நீக்கம் செய்ததோடு, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டியை தினசரி கண்காணிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும்போது, அலட்சியமாக இருந்தால், உரிய தலைமையாசிரியர் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை பாயும் என்றும், கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.'புகார் பெட்டியை கண்காணிக்கணும்'முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''பள்ளிகளில் புகார் பெட்டியை தினசரி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் தொந்தரவு சம்பவங்கள் நடந்தால், மாணவிகள் புகார் அளிக்க முன்வர வேண்டும். இப்புகார்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.பெற்றோர் ஆசிரியர் கூட்டம் என்னாச்சு?பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கூறுகையில், ''குழந்தைகளின் கல்வி, பள்ளி வளாகத்திற்குள் தேவையான வசதிகள், புகார்கள் குறித்து பெற்றோர் தினமும் கேட்டறிய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் முறையாக நடப்பதில்லை. சமீபத்தில் சுண்டக்காமுத்துாரில், தகாத வார்த்தைகளால் மாணவரை, ஆசிரியர் ஒருவர் கண்டித்ததாக புகார் எழுந்தது. அங்கும், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த வேண்டுமென்பதே, முக்கிய கோரிக்கையாக இருந்தது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X